திருப்பூர் அருகே கரைபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பாச்சாங்காட்டு பாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பழமையான குட்டை உள்ளது. இந்த குட்டையை நம்பி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தார்கள் இருந்து அருகில் உள்ள கணபதிபாளையம் சென்னிமலை பாளையம் குன்னங்கள் பாளையம் அம்மன் நகர் உலகேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது

ஆனால் சாயக்கழிவு கலப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த குட்டையில் உள்ள மழை நீரை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது

மேலும் குட்டையில் சாயக் கழிவு நீரை விடுவதால் அருகில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது தற்போது குட்டையில் தேங்கியுள்ள மழை நீரை ஆடு மாடுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது

இந்நிலையில் இன்று பல்லடம் வட்டாட்சியர் சபரி கிரி தலைமையிலான அதிகாரிகள் மாசடைந்த குட்டையை ஆய்வு செய்தார்கள் குட்டையில் உள்ள நீரை ஆய்வுக்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்துச் சென்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *