தூத்துக்குடி.
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885-இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.

பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது.

பாரதிய ஜனதா கட்சி, தீனதயாள் உபாத்தியாயாவால் 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுயச் சார்புக் கொள்கையும், தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது.

இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாச்சுபாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது.

காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ஜ.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையைப் பெற்று தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சி அமைத்த காங்கிரஸ் அல்லாத முதல் கட்சி ஆனது.

குஜராத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி, 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியைப் பிடித்து பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவருடைய பல்வேறு சாதனைகளின் மூலம் 2019, 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று பிரதமராக பணியாற்றி வருகின்றார்.

அடுத்து வருகின்ற இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் வளர்ச்சியின் பாதையில் செல்கிறது. பல மாநிலங்களில் தலைவர்கள் உழைப்பும், மற்றவர்களின் அரவணைப்பும் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறது. எங்கு மாநில தலைவர்களின் மாற்றம் நடைபெற்றாலும் கோஷ்டி பூசல் தலை தூக்குவது கிடையாது. தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.

அதுதான் பாஜக காங்கிரஸை பொறுத்தவரையில் அகில இந்திய தலைவர் பதவியை ஏற்பதற்கே ராகுல் காந்தி தயக்கம் காட்டும் நிலையில் இந்திய திருநாட்டை எப்படி வழிநடத்துவார் என்ற அச்ச உணர்வு தான் அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக அமைகிறது.

இதை உடைத்தெறிந்து ராகுல் காந்தி அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்; கொண்டால் மட்டுமே கட்சி வளர்ச்சியடையும். எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வரும் இளைய தலைமுறையினருக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். கோஷ்டி பூசல் இல்லாத நிலை உருவாக வேண்டும்.

இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப கட்சிக்கு வலு சேர்த்து உழைப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொறுப்பில் அமர்த்தினால், கட்சியும் வளரும், கைகளும் வலிமை பெறும். பிழைப்பவர்களை ஓரங்கட்டி விட்டு உழைப்பவர்களை உற்சாகப்படுத்தினால் 2029ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எழுச்சியை காணலாம்.

இரண்டு தேசிய கட்சிகளின் கண்ணோட்டத்தில் தான் 28 மாநில மக்களும், 8 யூனியன் பிரதேச மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இதை கருத்தில் இரண்டு தேசிய கட்சிகளும் இந்திய திருநாட்டிற்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *