கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி ஓய்வு விடுதி அருகே கடந்த 11 ஆம் தேதி தண்ணீரில் உடலில் பெரும்பாலான பாகங்கள் மூழ்கியவாறு பெண் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது இதையறிந்த வனத்துறையினர் அந்த யானையை அந்த இடத்திலிருந்து விரட்ட முயற்சி மேற்க் கொண்டும் அந்த யானை நகராமல் அதே இடத்திலேயே நின்றுள்ளது அந்த யானையை கூர்ந்து கவனித்தபோது வயிற்று பகுதியில் வலது பின்புறத்தில் ஒரு கீறல் காயம் இருப்பதையும் மற்றொரு யானையின் இனச்சேர்க்கை யின் போது ஏற்பட்ட காயம் என அறியப்பட்டு அதற்கான மருந்துகள் பழங்கள் மூலம் வாய்வழியாக நேரடியாக உணவு அளிக்கப்பட்டு மூன்று தினங்கள் தொடர் கண்காணிப்பில் மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த நிலையில் நேற்று சுயம்பு என்ற கும்கி யானையை கொண்டு ஆற்று நீரிலிருந்து பெண் காட்டுயானையை கரைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டபோது அந்த கும்கியானை அருகில் செல்லாததால் மற்றொரு கும்கியானையை கொண்டு முயற்சி மேற்க் கொண்டும் நீரிலிருந்து நகராத பெண்காட்டுயானை திடீரென கீழே விழுந்து இறந்துள்ளது இதைத்தொடர்ந்து இன்று அந்த பெண் காட்டு யானையின் பிரேத பரிசோதனை வன கால்நடை மருத்துவர்கள் மூலம் நடைபெறுவதாக மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தெரிவித்துள்ளார் மேலும் வால்பாறை பகுதியில் சமீபமாக மூன்று காட்டுயானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *