பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை ஆதித்தமிழர் பேரவையினர்
இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!
முதல் சாதி மறுத்து காதல் திருமணம் செய்த மாவீரன் மதுரை வீரன் நினைவு தினமும் உலக காதலர் தினமான “வேலன்டைன்ஸ் டே” தினத்தை ஆதித்தமிழர் பேரவை மதுரை மாநகர் மாவட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது.
மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள ராஜாஜி பூங்காவிற்கு வருகை தந்த காதல் தம்பதியினருக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கபீர்நகர் கார்த்திக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரு.தலித்ராஜா.மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் இரா.செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சாமிக்கண்ணு,
ஐ. டி. விங்க் துணைச் செயலாளர் லெட்சுமி சசிக்குமார் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆதவன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் மணிகண்டன்,மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வக்குமார்,மாவட்ட தூய்மைத் தொழிலாளர் அணிச் செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் செல்லப்பாண்டி மற்றும்
மகளிரணி பொறுப்பாளர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.