நல்லம்பள்ளி அருகே அரசு பள்ளியில் படித்த 2 வகுப்பு மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆசிரியரை கண்டித்ததால் பரபரப்பு.
தர்மபுரி மாவட்டம் மானியதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அஜ்ஜிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 37 மாணவர்கள் பயின்று வருகின்றன. இவர்களுக்கு இரண்டு பெண்பால் ஆசிரியர்கள் வகுப்பை நடத்தி வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியர் விடுமுறை என்பதால் தலைமை ஆசிரியர் கஸ்தூரி அவர்கள் மட்டும் அனைத்து மாணவர்களையும் கவனித்து வந்துள்ளார்.
அப்போது அனைத்து மாணவர்களையும் பார்த்துக் கொள்ளும் பொழுது ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் இரண்டாம் வகுப்பு மாணவனின் கை முட்டியின் மீது பலமாக அடித்துள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு கையில் பலத்த அடிபட்டு வீங்கி உள்ளது. இதனால் மாணவன் அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற நிலையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார்.
இதனை பார்த்த பெற்றோர் ஆறுமுகம் மகனிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார். அதற்கு மாணவன் தலைமை ஆசிரியர் என்னை அடித்து விட்டார் என கூறியுள்ளார். அதனை அடுத்து மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இது சம்பந்தமாக தலைமை ஆசிரியருக்கு போன் செய்து தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது; நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். என்னுடைய மகன் இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். நாங்கள் தான் படிக்காமல் கட்டிட வேலை செய்து வருகிறோம்,இதனால் என்னுடைய மகன் நல்ல முறையில் படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு அனுப்பி வருகிறோம். இந்த நிலையில் கடுமையான முறையில் ஆசிரியர்கள் நடந்து கொள்வதால் என்னுடைய மகன் மட்டும் இல்லாமல் மற்ற மாணவர்களும் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என வீட்டிலேயே இருக்கின்றனர்.
நாங்கள் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்து, ஆசிரியர்களிடம் மாணவர்களை கடுமையாக அடிக்காதீர்கள் என பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். இந்த நிலையில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய இந்த பள்ளியில் ஒருவர் விடுமுறை எடுத்து விட்டால் மற்றொரு ஆசிரியர் தான் அனைத்து மாணவர்களையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
இதனால் அவர்கள் ஒரு சில நேரங்களில் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றன. அதன் காரணமாக என்னுடைய மகனின் முட்டியின் மீது கடுமையாக தாக்கியதால் அவனுடைய கை பலமாக வீங்கி உள்ளது. நான் அவனை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடு திரும்பினேன்.
அதன் பிறகு நடந்த விபரத்தை ஆசிரியரிடம் கேட்பதற்காக மொபைல் போனில் தொடர்பு கொண்டேன். ஆனால் அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் அருகில் இருப்பவர்களிடம் மொபைலை கொடுத்துவிட்டு அவர் ஒரு வேலையாக இருக்கிறார் என அலட்சியமாக பேசினர். இதனால் நாங்கள் பள்ளிக்கு நேரடியாக வந்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை மாணவர்களை கடுமையாக தாக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தேம்.
அப்போது மானியதன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் பாபு என்பவர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாங்கள் மாணவர்கள் படிக்க வில்லை என்றால் ஓரளவு கண்டிக்க வேண்டியது தான், ஆனால் அவர்களுக்கு வேறு எங்கேயாவது இருக்கும் கோபத்தை சிறிய மாணவர்கள் மீது காட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்து சென்றோம் என கூறினார்.