மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டி கட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலி கொலையாளிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்த கிராம மக்கள். பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிப்பு.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டி கேட்ட ஹரிஷ்,ஹரி சக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாராய வியாபாரிகள் ராஜ்குமார் தங்கதுரை மூவேந்தன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் கொலை சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்கள் கொலையாளிகளின் இரண்டு வீடுகளை அடித்து நொறுக்கி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து தீ வைத்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் 20 க்கும் மேற்பட்ட போலீசார் முட்டம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.