மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை புரிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு மதுரை மாவட்ட திமுக மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.