மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்துா்
அருள் ஆனந்தர் கல்லூரியில் பயிலும் தேதிய மாணவா் படை மாணவன் சந்தோஷ் பிரபு மற்றும் மருது பாலாஜி (14 TN BN NCC திண்டுக்கல்), ஜனவரி 26, 2025 அன்று புது தில்லியின் கர்தவ்ய பாதையில் நடைபெற்ற மதிப்புமிக்க குடியரசு தின அணிவகுப்பு தல் சைனிக் முகாம் பங்கேற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அவர்களின் சாதனையைக் கண்டு, தமிழ்நாடு மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி முழுவதும் பெருமை அடைந்த்தது. கிராமப்புற பின்னணியைச் சேர்ந்த இரு மாணவர்களும், இந்த மாபெரும் தேசிய நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பங்கேற்பது அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சிறப்பிற்கு சான்றாகும்.
இந்த மகத்தான நிகழ்வில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், திரு. சந்தோஷ் பிரபு தனது மாநிலத்திற்கும் நிறுவனத்திற்கும் மரியாதையையும் அங்கீகாரத்தையும் கொண்டு வந்துள்ளார்.
அவரது சாதனை சக மாணவர்களுக்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைகிறது. இந்த சிறப்பான சாதனைக்காக அருள் ஆனந்தர் கல்லூரியின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை ஊக்கப்படுத்திய அருள் ஆனந்தர் கல்லூரியின் தேசிய மாணவா் படை அதிகாாி முனைவர் அரோக்கிய மரியா மைக்கேல் ராஜா வை கல்லூரியின் நிர்வாகம் பாராட்டியது.