செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.
கிராம ஊராட்சி அளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை கடந்த 2015 ம் ஆண்டு முதல் அனைத்து ஊராட்சிகளிலும் தமிழக அரசு செயல்படுத்திக்
கொண்டு வருகிறது.
இத்திட்டத்தில் தூய்மை காவலர்களை நியமனம் செய்து அனைத்து வீடுகளிலும் குப்பைகளை பெறுதல் குப்பைகளை பிரித்தல் குப்பைகளை மேலாண்மை செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை மேலும் அடுத்த கட்ட நகர்வாக எனது குப்பை எனது பொறுப்பு என்ற ஒலிநாடாவினை தமிழக அரசு வெளியிட்டு அனைத்து மக்களுக்கும்
இதனை சென்றடையும் பொருட்டு ஒவ்வொரு ஊராட்சிகளிலும் குப்பைகளை எடுப்பதற்கான வழங்கப்பட்டுள்ளது.
மின்கல வண்டியில் இந்த பாடலை ஒலிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தும்
பணி செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரிசங்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மல்லிகாமணி,வார்டு உறுப்பினர் ஜெகதீஸ்வரி பாலாஜி,
வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் ஊராட்சி ஊக்குநர் அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.