செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில்
வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர்
அருண்ராஜ் ஆலோசனைப்படி நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமில் சிறப்பு பொது மருத்துவம் கண் மருத்துவம், பல் மருத்துவம் வாய் புற்றுநோய் கண்டறிதல் தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் தாய் சேய் நல சிறப்பு மருத்துவம் தடுப்பூசி பணிகள் சித்த மருத்துவம்
உள்ளிட்ட மருத்துவம் மற்றும் பரிசோதனைகள் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முகாமில் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் தலைமை
தாங்கி தொடங்கி வைத்தார். ஒன்றிய பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன்,
14வது ஒன்றிய கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான முதுகரை கார்த்திகேயன்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதி, கோபாலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந் நிகழ்ச்சி காண ஏற்பாட்டினை அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வி.யோகேஷ்பாபு, செய்திருந்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோபிநாத்,ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் காஞ்சனா, தினகரன், ஜனார்த்தனன், மாரியம்மாள், பாலாஜி, உஷா, ரேணுகா, ராணி,உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.