திருப்பூர் மாவட்டம், காங்கயம் மற்றும் சென்னிமலை பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இதற்காக வருட கணக்கில் விவசாயிகள் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை வேட்டி மற்றும் சேவைகளை கலைத்து அதிரடி போலிசார் கைது செய்தனர்.

விடிய விடிய 2வது நாள் போராட்டம்

நேற்று முன்தினம் சிவன்மலை, சென்னிமலை ஆகிய பகுதிகளில் நாய்கள் கடித்து 23 ஆடுகள1 உயிரிழந்த நிலையில் விவசாயிகள் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் காலை 11 மணியில் இருந்து காங்கயம்- சென்னிமலை எல்லை திட்டுபாறை அருகே பாரவலசில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் நேற்று காலை முதல் 2வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்காக விவசாயிகள் விடிய விடிய போராட்ட களத்தில் தங்கினர்.

போலிசார் அதிரடியாக கைது போராட்டம் தீவிரமடைந்த நிலையில் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எஸ்பி கிரிஷ் யாதவ் அசோக் மற்றும் மாவட்ட டிஆர்ஓ கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகளுடன் நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்ற நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்(ஆண்கள் மற்றும் பெண்கள்) வல்லுகட்டாயமாக தூக்கி சென்றும், அராஜகமாக பேருந்துகளில் கைது செய்து அனைவரையும் அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 6 மணிக்கு மேல் காங்கயம் சென்னிமலை சாலையில் போக்குவரத்து செயல்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *