காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் அருகே இளைஞர் தற்கொலை குடிப்பழக்கத்தால் விபரீதம்
காங்கயம் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.காங்கயம் அருகேயுள்ள ராமபட்டிணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவரது மகன் பிரவீன்குமார்(24), டிரைவராக வேலை பார்க்கும் பிரவீன்குமார் குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது தாயாருடன் வாக்குவாதம் செய்து, வீட்டிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டவர், அங்கிருந்த இரும்பு ஆங்கிளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.