கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
அழகு மலையில் நாளை ஜல்லிக்கட்டு பேட்டி-
வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு..
திருப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற6 ஆம் ஆண்டு அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நாளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைக்க உள்ளனர்
சுமார் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் வாடிவாசல் அமைத்தல், ஜல்லிக்கட்டு போட்டிக்கான களம் அமைத்தல், 5000 பார்வையாளர்கள் அமரும் வகையில் பார்வையாளர்கள் மேடை அமைத்தல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். வாடிவாசல் பார்வை யாளர்கள் அரங்கம் மருத்துவ முகாம்கள் ஆகிய இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.