கடலூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சியில் பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில மீனவர்அணி இணை செயலாளர் தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜே குமார் ஆகியோர் முன்னிலையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எம்சி சம்பத் கலந்து கொண்டு அம்மா பேரவை சார்பாக அச்சிடப்பட்ட குண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு உழவர் சந்தையில் வழங்கினார்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்ததாவது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பல்வேறு சாதனைகளை படைத்த அரசாக திகழ்ந்தது

50 லட்சம் மான மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணியை வழங்கிய அரசு எடப்பாடி அரசு கடலூரில் புதிய மாநகராட்சி அலுவலகம் அரசு மருத்துவமனை யில் புதிய மகப்பேறு மருத்துவமனை கடலூர் மாநகராட்சியில் மழை நீர் தேங்காத வகையில் விஞ்ஞான முறைப்படி அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் வாய்க்கால் கடலூர் மாவட்டத்தில் அருவாமுக்கு ஓடை திட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவனை பல தடுப்பணைகள் என ஏராளமான திட்டங்களை கழக ஆட்சியில் கடலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்து இருக்கிறோம்

இந்த சாதனைகள் எல்லாம் மக்களிடையே எடுத்துச் சொல்லி துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.திமுக ஆட்சி எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை மக்களின் நலன் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது கழக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செய்துள்ளோம்

இந்த ஆட்சியில் ஏன் இதுவரை எந்த இடத்தில் நலத்திட்டங்களும் செய்யவில்லை என்று இரண்டு ஆட்சியை ஒப்பிட்டு இத்துண்டு பிரசுரங்களை படித்தாலே பொதுமக்களாகிய உங்களுக்கு தெரியும். ஆகவே பொதுமக்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கழகத்திற்கு தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள் 2026 இல் கழக ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் அமையும் என்று சூல் உரைத்தார்.


இந்நிகழ்வில் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வா அழகானந்தம் மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், கந்தன் அண்ணா கிராம ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *