தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் புதிய இளைஞர் அணி அமைப்பாளராக அதிகாரப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டியை சார்ந்த சி. சர்மா அறிவிக்கப்பட்டார்
பொறுப்பு அறிவித்தவுடன் இளைஞரணிஅமைப்பாளரான கி.சர்மா தலைமையில் துணை அமைப்பாளர்கள் தா. சேரன்,ஏ பள்ளிப்பட்டி.சா. அய்யனார் பாப்பம்பாடி, நா.அஸ்லாம் வெங்கட சமுத்திரம், சே.அருண்குமார் காளி பேட்டை, கி.புகழேந்தி பூனையானுர்ஆகியோர் முன்னிலையில் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கட் சமுத்திரம் காளி பேட்டை,ஏ .பள்ளிப்பட்டி பகுதி சார்ந்த 100க்கு மேற்பட்ட திமுக இளைஞரணி மாணவர்கள் கலந்து கொண்டு பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்முத்துக்குமார்வீட்டுக்குச் சென்று மாலை சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்
புதிய பொறுப்பாளர்களை ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து சிறப்பாக அணியை வழிநடத்த வாழ்த்து தெரிவித்தார்
அப்போது பேசிய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சர்மா
தமிழகத்தின் முதல்வர்,எங்களின் தளபதியார். இயக்கத்தின் இதயமாக செயல்படக்கூடிய ஒன்றியஇளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்பை எங்களுக்கு வழங்கியுள்ளார் ,அவர் இட்ட கட்டளையை ஏற்றும்,எங்களது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க, எங்களது மாவட்ட பொறுப்புஅமைச்சர்எம் . ஆர் .கே . பன்னீர்செல்வம் அவர்களின் செயல்திட்டங்களை வடிவமைக்கும் எங்களது மாவட்டத்தின் திறன்மிக்க செயல் தலைவர் அண்ணன் பழனியப்பன் அவர்களின் வழிகாட்டுதலில், எங்களின் உற்றத் துணையாக வழிகாட்டியாக இருக்கும் ஒன்றிய செயலாளர் அண்ணன் முத்துக்குமார் அவர்களின் படை வீரர்களாக இந்த ஒன்றியத்தில் திமுகஇளைஞர் அணி வீரியத்துடனும், செயல்வடிவத்துடனும் களம் காணுவோம் என உறுதியளிக்கிறோம்
இவ்வாராக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சர்மா தெரிவித்துள்ளார்
பொறுப்பேற்ற இளைஞர் அணி பொறுப்பாளர்கள் வெங்கடசமத்திரத்தில் உள்ள தந்தை பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்