மகாராஷ்டிரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக இரத்ததான முகாம்
சத்ரபதி வீரசிவாஜியின் 395 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற இரத்த தான முகாமை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்..
சத்ரபதி வீரசிவாஜியின் 395 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மகாராஷ்டிரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக இரத்ததான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது..
கோவை இடையர் வீதியில் உள்ள மராட்டா பவன் அரங்கில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்..
இந்நிகழ்ச்சியில் , மகாராஷ்டிரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஸ்ரீதர் மகாதேவ் நிகாம்,துணை தலைவர்வள் சஞ்சய் சிவாஜி லாட்,மகாராஜ் பாபுராவ் சிண்டே,செயலாளர் அர்ஜூன் ஜானு பவார்,துணை செயலாளர் சஞ்சய் மோகன் பட்டீல்,பொருளாளர் அர்ஜூன் ராஜராம் மொகித்தே,துணை பொருளாளர் பித்தேஷ்வர் ஜகந்நாத் போஸ்லே உட்பட நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்…
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக சிவா ஜெயந்தியை முன்னிட்டு இந்த மருத்துவ முகாம் நடைபெறுவதாக மகாராஷ்டிரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஸ்ரீதர் மகாதேவ் நிகாம் தெரிவித்தார்..