தூத்துக்குடி மாநகரில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் பல்வேறு மக்கள் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது மருத்துவ முகாமிற்கு முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்

இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை எலும்பு நோய் பரிசோதனை பொது நோய் பரிசோதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது

மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தால் பின்பு முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறுகையில் தூத்துக்குடி மாநகரில் ஐந்து இடத்தில் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

முதல் கட்டமாக இன்று மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதுதான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் படியாகும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரவின் பெயரில் கழகப் பொதுச் செயலாளர் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாநகரில் மக்கள் பணியாற்றி வருகிறோம் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு எங்களது தலைவர் நடிகர் விஜயை முதலமைச்சர் ஆக்குவது தான் எங்களது முதல் கட்ட பணியாகும் அதற்கான பணிகளை தூத்துக்குடி மாநகரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று நடிகர் விஜயை முதலமைச்சர் ஆக்குவதற்கான பணிகளை மக்களிடம் எடுத்துரைப்போம் என்று முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *