பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே இரும்புத்தலை ஊராட்சியில் சிறப்பு பொது மருத்துவ முகாம்..
100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, இரும்புத்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொது சுகாதாரம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் அரசு கண் மருத்துவமனை, இந்திய பல் மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் பொது மருத்துவம், இசிஜி, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, பற்களின் குறைபாடுகள் கண்டறிதல், கண்களின் குறைபாடுகள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது உடலை பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.