மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டி கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த 14 ஆம் தேதி சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் இரட்டை கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர் இந்நிலையில், வழக்கின் தொடர் விசாரணையில், சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரது பெற்றோர்களும் சாராய வியாபாரிகளுமான முனுசாமி- மஞ்சுளா ஆகியோரை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனர்.