போடிநாயக்கனூர் நகராட்சிக்கு சிறந்த நகராட்சிக்கான விருது தேனி எம் பி எம் பி வாழ்த்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் சிறந்த மக்கள் சேவை ஆற்றியதற்காக அதனை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த நகராட்சி க்கான விருது தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆர்.வி .ஷஜீவனா அவர்கள் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி ஆகியோருக்கு வழங்கினார்கள் நகராட்சியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சிறந்த நகராட்சி விருது பெற்றதற்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து போடிநாயக்கனூரில் 33 வார்டுகளிலும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு வளர்ச்சி பணிகள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்தும் மேலும் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் பற்றி கேட்டறிந்து அதற்கான நிதியை தனது தேனி பாராளுமன்ற எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கி தருவேன் என்றும் இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அவர்களிடமும் தெரிவித்து அந்தப் பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான எம் சங்கர் நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் கட்டிட அமைப்பு ஆய்வாளர் சுகதேவ் சுகாதார ஆய்வாளர்கள் சபீர் திருப்பதி 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட ஐடி விங் தலைவருமான மகேஸ்வரன் மற்றும் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *