தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீராணம் துணை மின் நிலையத்தின் கீழ் செயல்படும் வெங்கடேஸ்வரபுரம் கிராம விவசாயகளுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள மின் விநியோகம் தொடர்ந்து தடைபட்டு வருவதாகவும்
ஒரு மாத காலத்திற்குள் 4,5 மின் கடத்திகள் தீப்பற்றி எரிந்து செயலிழந்துள்ளதால் விவசாயிகளுக்கு ஒரே மின்கடத்தியில் 24 மணி நேரத்திற்கு சுழற்சி முறையில் மின்சாரம் வழங்குகிறார்கள் இப்போது பயிர் கருது வரும் நேரத்தில் இது போன்று சுழற்சி முறையில் மின்சாரம் வழங்குவதால் விவசாயம் பாதிப்படைந்து வருவதாகவும்
இந்த சுழற்சி முறையில் மின் கடத்தி யில் அடிக்கடி பியூஷ் கட்டாகிறது வேறு பியூஷ் மாற்றுவதற்கு மின் ஊழியர்கள் பற்றாக்குறையால் 3 மணி நேரம் ஆகிறது ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் 3 தடவை கட் ஆகி பகலில் 9 மணி நேரம் வீணாகிறது எனவும் மின் மாற்றிகள் சரிவர பராமரிக்கப் படாததே விவசாயிகள் புலம்புகின்றனர்
ஆகவே மின் வாரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.