திண்டுக்கல் குஜிலியம்பாறை போலீசார் மல்லபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சந்தன மரங்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது இதனையடுத்து சந்தன மரங்களை கடத்தி சென்ற அய்யலுார் வேங்கனுார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், ரஞ்சித், கவுதம் ஆகியோரை 4 கைது செய்து சந்தன மரங்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டபோது
குஜிலியம்பாறை அருகே சேர்வைக்காரன்பட்டி பகுதி தனியார் தோட்டத்தில் சந்தனம் மரங்களை வெட்டி கடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.