பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே உத்தமதானபுரத்தில் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக தமிழ்த்தாத்தா உ.வே சாமிநாதையர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் தாத்தாவின் தமிழ்ப் பணிகள் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள உவேசா நினைவு இல்லத்தில் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக உ .வே. சாவின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் அமைந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . தாளாளர் உயர்திரு எம் .ஜி சீனிவாசன் மற்றும் முதல்வர் முனைவர் வெ.ஹேமா வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ச சுபாஷ் அவர்கள் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். சிறப்புரை ஆற்றுகையில் தமிழினத்தின் வரலாற்றினை உலகறிய செய்தவர் உவேசா. பன்முக ஆளுமை கொண்டவர் ஊர் ஊராக தேடி தேடி அலைந்து திரிந்து சேகரித்து நூலாக்கம் செய்தவர்.
அவர் இல்லை என்றால் இன்னைக்கு கிடைத்திருக்கின்ற பழமையான நூல்கள் எல்லாம் கிடைக்க பெறாமல் போயிருக்கும் அந்த நூல்கள் இல்லை என்றால் தமிழினத்தின் வரலாறு இல்லை அதோடு மட்டுமல்லாமல் உவேசா சிறந்த பண்பாளர் குரு பக்தி மிக்கவர் பெற்றோரை மதிக்க கற்றுக் கொண்டவர்.
உடையவர் இந்த பண்புகளை எல்லாம் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியினை தமிழ்த்துறை தலைவர் கி.மணிவாசகம் ஒருங்கிணைத்திருந்தார் நூலினை உத்தமதானதபுரம் தமிழ் அமைப்பினுடைய தலைவர் அன்பழகன் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் செ. கணேச மூர்த்தி நன்றி கூறினார் நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .