சுந்தராபுரம் பகுதியில் அதர்வா சுசூகி உதயம் அதர்வா சுசூகி நிறுவனத்தின் புதிய பிரீமியம் டீலர்ஷிப் ஷோரூம் உயர்தர சர்வீஸ் சேவை வசதிகளுடன் சுந்தராபுரம் பகுதியில் துவங்கப்பட்டது…
இரு சுந்தராபுரத்தில் புதிய பிரீமியம் டீலர்ஷிப் திறந்து அதன் சேவைகளை விரிவாக்குகிறது
சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரீமியம் டீலராக உள்ள அதர்வா சுசூகி, கோவை சுந்தராபுரம் பகுதியில் தனது மூன்றாவது ஷோரூமை துவங்கியது..
இதற்கான துவக்க விழா அதர்வா சுசுகியின் நிர்வாக இயக்குனர் ராஜூ தலைமையில் நடைபெற்றது..இதில் சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிசி உமேடா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அதர்வா சுசூகி ஷோரூமை திறந்து வைத்தார்..
இந்நிகழ்ச்சியில் அபர்த்சேல்ஸ் துணைத்தலைவர் ஹரிகிருஷ்ணா கலந்துகொண்டார்.இதில் அதர்வா சுசூகி நிர்வாக இயக்குனர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்..
அப்போது பேசிய அவர்,கோவை சுந்தராபுரத்தில் எங்கள் மூன்றாவது ஷோரூமை துவங்குவதில் பெருமை கொள்வதாக கூறிய அவர், அதர்வா சுசூகி துவங்கி முதல் ஆண்டிலேயே 3,600க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து, 15,000க்கும் அதிகமான வாகனங்களுக்கு சேவைகளையும் வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்..
வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையை பெற்று சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் “இந்தியாவின் வளர்ந்து வரும் டீலர்”என்கிற பெருமைக்குரிய விருதையும் அதர்வா சுசூகி பெற்றுள்ளதை அவர் சுட்டி காட்டினார்..
புதிதாக சுந்தராபுரம் பகுதியில் துவங்கப்பட்டுள்ள அதர்வா சுசூகி ஷோரூமில் சுசூகி நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் நல்ல ஆஃபர்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் சர்வீஸ் தொடர்பான சேவையில் உயர்ந்த தொழில் நுட்பத்திலான உபகரணங்களை கொண்டு, நல்ல அனுபவமிக்க தொழில் நுட்ப ஊழியர்கள் வாகனங்களை சர்வீஸ் செய்ய உள்ளனர்..