கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களே அதிகம், கள்ளு குடித்து தமிழகத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை…
கல்லு கிடைக்காத தடை என்பது தமிழக அரசின் சதித்திட்டம்….
பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன வழக்கறிஞர் ஈசன் பரபரப்பு பேட்டி…..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கல் விடுதலை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று பல்லடத்தில் நடைபெற்றது. செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது. பனை மரங்கள் உள்ள 108 நாடுகளில் கல்லுக்கோ கல் சார்ந்த பொருட்களுக்கோ தடையில்லை இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கல்லுக்கு தடை கிடையாது
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது உலகத்திலேயே கல்லின் மீது விதிக்கப்பட்ட தடை தான் மிகவும் கொடியதாகும் கல் மீதான தடையை நீக்க கோரி 38 ஆண்டுகளாக தமிழ்நாட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள் அண்டை மாநிலமான கேரளாவில் கல்லை இறக்கி பதப்படுத்தி அரசே விற்பனை செய்து வருகிறது அதன் மூலம் ஆண்டுக்கு 4000 கோடி வருமானம் ஈட்டுகிறது 8000 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் கேரளாவில் இருக்கக்கூடிய தென்னை மற்றும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானம் உயர்த்துகிறது
ஆனால் தமிழ்நாட்டில் மாநில மரம் பனைமரம் தென்னிந்தியாவில் அதிக தென்னை மரம் உள்ள மாநிலமும் நம் மாநிலம் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய படையேறிகள் ஆந்திரா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு பணிக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
கல் என்பது மதுபானம் அல்ல அது ஒரு உணவு பொருள் கல்லில் மனிதனின் அன்றாட வாழ்விற்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன மலட்டுத்தன்மையை போக்குவதற்கு அருமருந்தாக கல் விளங்குவதாக சித்த மருத்துவம் கூறுகிறது உணவாக மருந்தாக சத்துக்கள் நிறைந்த பானமாக உள்ள கல்லை மதுவிலக்கு சட்டத்தில் தமிழக அரசு வைத்துள்ளது தவறு மதுவிலக்கு சட்டத்திலிருந்து கல்லை நீக்க கோரி மரபு பணமாக கல்லை அறிவிக்க கோரி இந்த மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள் அரசியல் மட்டுமே செய்வதாகவும் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சாய ஆலயத்தை நடத்துவதால் தான் கல்லுக்கு அனுமதி கொடுக்காமல் வைத்துள்ளார்கள் எனவும் கல் அந்நிய மதுபானங்களுக்கு போட்டி அல்ல எனவும் கேரளாவில் கல்வெட்பனையும் உயர்ந்துள்ளது
அந்நிய மதுபான விற்பனையும் உயர்ந்துள்ளது தவறான கற்பனையால் தமிழக அரசு கல்லுக்கான அனுமதி நிறுத்தி வைத்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தான் தமிழகத்தில் அதிகம், கள்ளு குடித்து உயிரிழந்தவர்கள் தமிழகத்தில் யாரும் கிடையாது. தமிழக அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும் கள்ளுக்க தடை என்பதை ஒரு சதித்திட்டமாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்காக தமிழகத்தில் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி முதற்கட்ட மாநாடாக இந்த மாநாடு நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.