
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது பல்லடம் அங்காளம்மன் கோவில் அருகே லாரியானது நடுரோட்டில் டீசல் இல்லாமல் நின்றது தொடர்ந்து லாரியின் பின்னால் சென்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லாரியானது டீசல் நிரப்பப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது