திருப்பூர் மாநகராட்சி 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி தமிழ்ச்செல்வி கனகராஜ் தலைமையில் விகாஸ் ஸ்கூல் வீதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் இரண்டாவது மண்டல அலுவலகத்தில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து வீட்டுக்குள் சாக்கடை நீர் புகுந்து விடுவதாகும் இதனால் பல்வேறு அண்ணல்களை பொதுமக்கள் சந்தித்து வருவதாகவும் மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இந்த சாலையில் செல்வதால் அவர்களுக்கும் ஏதோ ஒரு தொற்று நோய் ஏற்படும் என பெற்றோர்கள் மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி கனகராஜ் தலைமையில் இரண்டாவது மண்டல அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரமாக மண்டல அலுவலக வாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டம் கைவிடப்பட்டது இதில் அதிமுக வார்டு செயலாளர்கள் 16 வது வார்டு வானவில் கனகராஜ் .17 வது வார்டு ரெங்கசாமி.7 வது விஜயகுமார் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்