திருவொற்றியூர் மண்டலம் – சுகாதார துறை சார்பில், காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில், விழிப்புணர்வு பேரணி, நேற்று காலை நடந்தது.
அதன்படி, திருவொற்றியூர், தேரடி – பூந்தோட்டப் பள்ளி வளாகத்தில், காசநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி யினை, 200 க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணியை, தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியானது, நெல்லிக்காரன் தெரு வழியாக, சன்னதி தெருவை அடைந்தது. அங்கு, கலை குழுவினர், நாடகம் நிகழ்த்தியும், ஒயிலாட்டம் மூலமும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில், தனியரசு பறை இசைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கியும், மக்களுக்கு காசநோய் குறித்த எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில், மண்டல நல அலுவலர் லீனா, பகுதி சுகாதார அலுவலர்கள் அன்பழகன், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பேரணி சன்னதி தெரு வழியாக சென்று, மீண்டும் கல்லுாரி வளாகத்தை அடைந்தது.