போடிநாயக்கனூர் பாஜக நகரம் சார்பில் மார்க்கன்றுகள் நடுதல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் சித்ராதேவி தண்டபாணி தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் எம். தண்டபாணி போடிநாயக்கனூர் பாஜக நகர் மன்ற உறுப்பினரும் பாஜக பிரமுகருமான எஸ் மணிகண்டன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையோரங்களில் பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இது குறித்து பாஜக நகர் மன்ற உறுப்பினர் எஸ் மணிகண்டன் கூறும்போது தற்பொழுது மாசி மாதத்திலேயே கடுமையான பனிப்பொழிவு காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது அடுத்து வரவிருக்கும் கோடை மாத காலங்களான பங்குனி சித்திரை மாதங்களில் இதைவிட கடுமையான வெப்பத்தை பொதுமக்கள் அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது
இதனை தடுக்க மரக்கன்றுகள் மற்றும் மரங்கள் வளர்ப்பதால் தான் ஒரே தீர்வு மேலும் மரத்தில் இருந்து கிடைக்கும் காற்றுகளால் ஒரு விதமான சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு ஒரு விதமான சுத்தமான காற்று கிடைக்கும் என்றும் பாஜக கட்சி பொதுமக்களின் சேவையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் நடவு செய்து நடுவதன் மூலம் சுத்தமான காற்று கிடைத்து ஒரு விதமான வெப்பத்தை குறைக்க சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்