தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தினம் உறுதிமொழி ஏற்பு
ஆண்டுதோறும் பிப்21 -ஆம் தேதி தாய்மொழி வழியிலான பன்மொழிக் கற்றல், தாய் மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி உலகம் முழுவதும் இன்று இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கிரேஸ் கல்விக் குழுமத்தின் செயலாளர் ராஜ்கமல் பெட்ரோஜோஸ்வா தலைமையில் கல்லூரியின் நிர்வாக அதிகாரி வீரராஜன் தினகரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் ஜோஸ் சசிகுமார் இவர்களின் முன்னிலையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ – மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு உலக தாய்மொழி தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.