போடிநாயக்கனூர்நகர வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 2025.2028 ஆம் ஆண்டு வருடத்திற்கான போடி நகர வணிகர்கள் சங்க தலைவராக பி. வேல்முருகன் செயலாளராக டி. செல்வகுமார் பொருளாளராக கே.என்.பாலகிருஷ்ணன் ஆகியோர் ஓரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான எம்.சங்கர் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் திமுக நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் தங்களின் மேலான பணி சிறக்க மனதார வாழ்த்தினார்கள்.