தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது அதன்படி கடந்த புதன்கிழமை கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
அந்த முகாமில் 39 மனுக்கள் பெறப்பட்டது அதில் 21 மனு உடனடி தீர்வு காணப்பட்டது மீதி உள்ள 18 மனுக்களுக்கு இன்று அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது இதில் சொத்து வரி பெயர் மாற்றம் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்டவைகள் இடம்பெற்று இருந்தது
இதற்கான ஆணைகள் வழங்கும் விழா மாநகராட்சியில் படித்து நடைபெற்றது மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார் மேயர் ஜெகன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது 23 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முகாம் ஆரம்பிக்கப்பட்டது
1750 மனுக்கள் பெறப்பட்டுள்ளது அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது நேரடி தொடர்பில் நாங்கள் கண்காணித்து வருகிறோம் தொடர்பில் உள்ள மெயின் சாலையில் எல்லாம் போடப்பட்டுள்ளது மற்ற சாலைகள் எல்லாம் கணக்கெடுத்தப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது வருகிற மே மாதம் அந்த சாலைகளும் போடப்படும் மூன்று வருடங்களுக்கு முன்பு மாசு 170 டிகிரி இருந்தது
ஆனால் தற்போது இந்தியாவிலேயே காக்கிநாடாவும் தூத்துக்குடி மாநகராட்சி தான் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்துள்ளோம் 50 சதவீதம் தற்போது உள்ளது இதனால் தூத்துக்குடி மாநகர் மக்கள் வாழும் தகுதியாக உள்ளது சுற்றுச்சூழல் மாசு படக்கூடாது என்பதற்காக மரம் நடப்பட்டு வருகிறது
தெருக்களில் நடப்படும் மரங்களுக்கு அந்தந்த வீட்டின் உரிமையாளர்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும் தூத்துக்குடி மாநகரில் பிளாஸ்டிக் டம்ளர் முற்றிலும் பயன்படுத்த வேண்டாம் அதனை தடுக்க வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் சாலை ஓர வியாபாரிகளுக்கு தமிழகத்திலேயே தூத்துக்குடி மாநகராட்சியில் தான் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வங்கி மூலம் கடன் வழங்கப்படுகிறது
6500 பேர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர் என்று மேயர் ஜெகன் கூறினார் இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் மண்டல தலைவர் நிர்மல் ராஜ் மாமன்ற உறுப்பினர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்