செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அ.ஆ.அகத்தியன், பி.தேவதர்ஷன் ஆகியோரின் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் தொகை இயக்கத் தலைவர் கோ. ப. அன்பழகன் தலைமை தாங்கினார்.லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஆஷா அன்பழகன், டாக்டர்கள் மது மலர் பிரசன்ன வெங்கடேஷ், ஷாலினி அகத்தியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.ஆ.அகத்தியன் அனைவரையும் வரவேற்றார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, முன்னாள் எம்பி துரை, ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் ஏழுமலை, கண்ணன், சாந்தி ராமச்சந்திரன், பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு,மாவட்ட கவுன்சிலர் குணா, திமுக ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சுஜாதா பாரதி பாபு,சிவாச்சாரியார் சங்கர், உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்சாதி மத வேறுபாடு இன்றி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொண்டு இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.