பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஆர்.வி.அறக்கட்டளை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர் .வி .எஸ் அறக்கட்டளை சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆர் வி எஸ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி மாணவிகளுக்கு கல்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் விதமாக கருத்துக்கள் வழங்கி
சிறப்புரையாற்றினார்.
மேலும் மாநில அளவில் நடைபெற்ற ஆங்கில கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவி பிரியதர்ஷினி- க்கு ஊக்குவிக்கும் விதமாக ஊக்கப்பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத் தலைவர் செந்தில்,சங்க செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் சம்பந்தம்,ஆர்.ஜோதி, அறக்கட்டளை செயலாளர் சரவணகுமார், லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் கணேசன்,பாபநாசம் நகர காங்கிரஸ் தலைவர் பாலாஜி மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.