வட்டி, வரதட்சனை எதிராக மற்றும் முஸ்லிம்களின் உள் இடஒதுக்கீட்டை 3.5% லிருந்து 7% உயர்த்தி தர தமிழக அரசை வலியுறுத்தி பட்டூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டம் நடத்திய மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்,மற்றும் அல் முஃமினாத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி. காஞ்சி மாவட்ட தலைவர் அக்ரம் தலைவர் தலைமையில் பட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக இதில் சிறப்பு மாநில செயலாளர் அல் அமீன் இந்திய ஜனநாயகமும் இன்றைய முஸ்லிம்களும்! என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் முஹம்மது ஒலி இறைச்செய்தியை இறுகப் பற்றிய இப்ராஹிம் நபி என்ற தலைப்பிலும்
பேச்சாளர் .அப்துர் ரஹ்மான் நவீன கால சவால்களில் பெண்களின் பங்கு! என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
இதில் வட்டி, வரதட்சனைக்கும் எதிராகவும்,வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும்
தமிழகத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜாக வை கண்டித்தும்
முஸ்லிம்களின் உள் ஒதுக்கீட்டை 3.5% லிருந்து 7% உயர்த்த வலியிலுத்தியும்.
திருப்பரங்குன்றம் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறையை பாராட்டும் விதமாகவும் மும்மொழிக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய பாஜாக அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது..
மேலும் இஸ்லாமிய கல்வியகத்தில் சிறப்பாக பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள்,கேடயங்கள் வழங்கப்பட்டது.