கொடைக்கானலுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சென்றால் அனுமதி”பர்மீட்” ரத்து என மாவட்ட ஆட்சியர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி (Plastic) பொருட்கள் மற்றும் ஐந்து லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல மற்றும் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி தண்ணீர் பாட்டில்களுடன்,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுடன் கொண்டு செல்லும் வாகனங்களின் அனுமதி”பர்மிட்” ரத்து செய்யபடும் என என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.