திண்டுக்கல் நத்தம் சாலை குள்ளனம்பட்டி அருகே உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் க்ரைம் போலீசார் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமை தாங்கினார். இதில் முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன், நிர்வாக அலுவலர் முனியாண்டி,சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.