செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மஹா சிவராத்திரி பெருவிழா
வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழாவில் ஞானலிங்கத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
இதில் பிருந்தாவன் சித்தர் தவயோகி ஸ்ரீ ரகோத்தமா சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செம்பாக்கம் செல்வராஜ் சுவாமி திருக்கரங்களால் நடைபெற்று
மஹா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னால் காவல்துறை தலைமை இயக்குனர் பாலச்சந்தர்
மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மேகலா மதுராந்தகம் கிளை சிறை கண்காணிப்பாளர் கந்தசாமி ஆலந்தூர் போக்குவரத்துக்கு துறை ஆய்வாளர் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்
அரியந்தாங்கல் விஷ்னு துர்கையம்மன் ஆலய ஸ்தாபகர் மணிபாலன் சுவாமி,
வையாவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஏழுமலை பெங்களூரைச் சேர்ந்த கீர்த்திகா குமாரசாமி எம்ஜிஆர் ரவி சரளாதேவி ஆந்திரா சித்தூரைச் சார்ந்த பூர்ணிமா புகழேந்தி சென்னையைச் சார்ந்த தொழிலதிபர் முனுசாமி செங்கல்பட்டு சூர்யா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ராதிகா மோகன் கூடுவாஞ்சேரி சேர்ந்த தொழிலதிபர் தனலட்சுமி ராஜசேகர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு
சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.