தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் மலைக்கோயிலில் 26/2/25 புதன்கிழமை இரவு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு கால பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு கால அபிஷேகத்தில் கைலாசநாதர்க்கு பால், தயிர், சந்தனம் மற்றும் மூலிகைகளை கொண்டு ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரங்கள் செய்து அதன் பின் தீபாராதனைகளும் நடைபெற்றது.கூட்டு வழிபாடும் உலக நன்மை கருதி சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.
மாலை 6.00 மணி முதல் இரவு 9 மணி வரை அன்னதானமும் ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் அன்ன பிரசாதமும் கட்டளைதாரர்கள் எம்.வீரராஜ் ரியல் எஸ்டேட், எம். இராம தண்டபாணி Ex சேர்மன் தாமரைகுளம் வழங்கினார்கள். இரவு ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது . பக்தர்களுக்கு ருத்ராட்சம் விபூதி பிரசாதம் வழங்கபட்டது ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர்கள் சார்பாக செய்திருந்தனர்…