அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு குத்துவிளக்கேற்றி, மருத்துவப் பணியாளர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் இம்மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், சிகிச்சை பெறும் நபர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சுமார் 25}க்கும் மேற்பட்ட படுக்கைகள், உள்விளையாட்டு உபகரணங்களான சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் பிரபாகரன்,அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், மருத்துவக் கல்லூரி மருத்துவனை முதன்மையர் முத்துகிருஷ்ன்,நிலைய மருத்துவ அலுவலர் மரு.கொளஞ்சிநாதன், வட்டாட்சியர் முத்துலட்சுமி செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *