அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு பாத்தியப்பட்ட 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தில் மகா சிவராத்திரியையொட்டி இரவு கோவில் வளாகப் பகுதியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வேள்வி யாக பூஜை மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை
பூஜைகள் நடைபெற்றன.
பின்ன சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியின் தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்தி, மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்..