திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் (சேகல்) அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மகா சிவராத்திரி பால்குட அன்னதான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரங்கம் சேகல் கிராமத்தில் எழுந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ பெரிய தம்பிரான் சுவாமி அகோர வீரபத்திரசுவாமி இருளன் பெரியாச்சி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு இன்று மகா சிவராத்திரி பால்குட அன்னதான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோவில் மருளாளிகள் மற்றும் பக்தர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி பால்குடங்கள் எடுத்து வழிபட்டனர்.
பால்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் பால்குடத்தை சுமந்து தீர்த்த குளம் வலம் வந்து ஆலய கருவறையில் அமைந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பாலாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து தங்களுடைய வேண்டுதலை நிறைவடைய செய்தனர் .இந்த நிகழ்வில் கோவில் மருளாளிகள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர் .
விழாக்குழு சார்பில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுமார் 5000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.