கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே பெயிண்ட் கடையில் தீ விபத்து மூன்று கோடி மதிப்பில் ஆன பொருட்கள் எரிந்து சேதம்-4 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் இவர் பல்லடத்தை எடுத்த காமநாயக்கன்பாளையத்தில் கடந்த சில வருடங்களாக பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் வியாபார முடித்த பிறகு பெயிண்ட் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார் இந்நிலையில் நள்ளிரவில் திடீரென கடையிலிருந்து கரும்புகை வந்துள்ளது அதனைத் தொடர்ந்து தீப்பற்றி எரிந்துள்ளது
இதனை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கடை உரிமையாளருக்கும் பல்லடம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ கடை முழுவதும் பரவியது. இதனை அடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்
ஆனால் தீ கடை முழுவதும் பரவியது அதனை அடுத்த சூலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இரண்டு நிறைய வீரர்களும் சேர்ந்து நாலு மணி நேரமாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்தில் மூணு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது
இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மின் கசிவு காரணமா தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.