எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்று பாலத்தில் நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து. அடுத்தடுத்து லாரி மற்றும் வாகனங்கள் சென்றதால் சிதைந்து சாலையில் சிதறி கிடந்த உடல். போலீசார் மீட்டு விசாரணை.ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரண்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சூரக்காடு பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றியவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் -59. இவர் தற்சமயம் சீர்காழி வி.என்.எஸ் நகரில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் நடை பயிற்சிக்காக சட்டநாதபுரம் உப்பனாற்றின் பாலத்தில் ராஜேந்திரன் நடந்து செல்லும் போது பின்னால் வந்த நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றிச்செல்லும் கனரக லாரி அவர் மீது மோதியது இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார் இதனை அறியாமல் அடுத்தடுத்து லாரிகளும் கனரக வாகனங்களும் அடுத்தடுத்து சென்றதால் ராஜேந்திரன் உடல் முழுவதுமாக சிதைந்து சாலை முழுவதும் சிதறி கிடந்தது. தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் லாரியுடன் சீர்காழி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.