தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி குறைந்த மாத சந்தா தொகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டத்தில் மிக குறைந்த மாத சந்தா தொகையில் எச்டி மற்றும் எஸ் டி செட்டப் பாக்ஸ்களை விநியோகம் செய்து பொதுமக்கள் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய சேனல்களுடன் கேபிள் டிவி சேவை வழங்கி வருகின்றது
ஆண்டிபட்டி பெரியகுளம் தேனி போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன த்தின் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது மேற்படி பகுதியில் அரசு கேபிள் டிவி இணைப்பு கூறும் பொது மக்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக இணைப்பு வழங்க உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
எனவே அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தனியார் அலைவரிசைகளுக்கு இணையாக அதிக எண்ணிக்கையிலான சேனல்கள் மிகக்குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கப்பட்டு வருவதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி தெரிவித்துள்ளார்