எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு நடமாடும் வாகனத்தில் இலவச மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்.100க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்ல.சேது.ரவிக்குமார் ஏற்பாட்டில் நடமாடும் வாகனத்தில் இலவச மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது,
டாக்டர் .கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை,டாக்டர்.ஜி.விஸ்வநாதன் மருத்துவமணை குழுமம் இணைந்து 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு நடமாடும் வாகனத்தில் இலவச மார்பக புற்று நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெறும் இம் முகாமில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
உயர் சிகிச்சை தேவைப்படும் பெண்களுக்கு திருச்சியில் உள்ள மருத்துவ மணையில் இலவசமாக சிகிச்சை அளிக்க திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வழி திருமாவளன் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி. சீனிவாசன் உள்ளிட்ட திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கொள்ளிடம் கடைவீதியில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது பின்னர் தமிழகத்தை காப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்