அதிகாரிகளை எச்சரித்த திமுக மாவட்ட செயலாளர் அதிகார தோரணையில் இவ்வாறு பேசியுருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.- தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடியில் பேட்டி.!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் பேரிடருக்கு நிவாரணம் இல்லை. ஒன்றிய அரசு தமிழக அரசை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுத்து கல்விக்கு தரவேண்டிய நிதியை தராமல் ஆணவத்துடன் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பேசி வருகிறார். மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்றால் 1 ரூபாய் நதி கூட தர முடியாது என்று கூறியுள்ளார்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்குகிறது. ஒன்றிய அரசுக்கு வருகின்ற வருமானம் இந்த நாட்டு குடி மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் பாஜக ஆளுகின்ற மாநிலத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் மும்மொழி கொள்கையை எதிர்ப்பதால் நம் பக்கத்து மாநிலமான கர்நாடகா, கேரளாவும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் பல மாநிலங்கள் எதிர்க்க தயாராகி உள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று வயது சிறுமி மீது தவறு உள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு?
மாவட்ட ஆட்சியர் மிகச்சிறந்த ஓர் நிர்வாகி, மக்களோடு மக்களாக நின்றவர்., ஆனால் இவர் இவ்வாறு ஒரு கருத்தை கூறியது ஏற்புடையதல்ல

நாங்கதான் அடுத்த முதல்வர், நாங்க தான் அடுத்த முதல்வர் என தமிழ்நாட்டில் எல்லோரும் கூறி வருகிறார்கள். அதேபோன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் அவ்வாறு கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர், எஸ் பி நான் சொல்வதை தான் கேட்கணும் என்று திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் கூறிய நிலையில் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் இவ்வாறு கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாவட்டத்தின் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அனைவரின் நலனுக்காக செயல்படக்கூடியவர்கள். திமுக மாவட்ட பொறுப்பாளர் அதிகார தோரணையில் இவ்வாறு கூறி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றார்.

பேட்டி: வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *