அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமஞ்சமலை அய்யனார் திருக்கோவில் குதிரை எடுப்பு உற்சவ விழாவையொட்டி முகூர்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அரசம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார்சுவாமி கோவிலில் இருந்து பாலங்குச்சி, மூங்கில், பாலமரம் அடங்கிய கம்பில் பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதனை கிராம மக்கள் வானவேடிக்கை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தி கிராம மந்தையில் அரண்மனை, ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து இங்கு கூரை அமைத்து சுவாமி, குதிரை, அய்யனார், உள்ளிட்ட பல்வேறு சிலைகள் செய்வதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.