அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஊர்சேரி கிராம பகுதியில் டீரிம் வாரியர்ஸ் அணி சார்பில் மாவட்ட அளவிலான முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர் போட்டியின் முடிவில் முதல் பரிசை வலசை ஒயிட் ரோஸ் அணியினர் வென்றனர் முதல் பரிசு பெற்ற அணியினருக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தனியரசு பேரவையின் மாவட்ட செயலாளர் அய்யூர்தயாளன், கலந்துகொண்டு கேடயம் ரொக்க பரிசு சான்றிதழ் ஆகியவை வழங்கி வாழ்த்தினார்.
இரண்டாவது பரிசை கொண்டையம்பட்டி ரப்ஃ அண்ட், அணியினரும், மூன்றாம் பரிசை முளையூர் ராயல் கிங்ஸ் அணியினரும், நான்காவது மற்றும் ஐந்தாவது பரிசை அழகர்கோவில் சண்டியர் பாய்ஸ் அணியும் ட்ரீம் வாரியர்ஸ் அணியினரும் வெற்றி பெற்றனர் இவர்களுக்கு சுழல் கோப்பை ரொக்கப் பணம் சான்றிதழ்கள் உட்பட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.. இவ்விழா ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்திருந்தனர்..
சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். ஒன்றிய துணை செயளாலர் அருண்குமார், பொறியாளர் அணி ராகுல், பாலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்த அணியினருக்கு ரொக்க தொகை, மற்றும் பரிசு பொருட்களும், கேடயமும் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கீழச்சின்னணம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் திமுக கிளை கழகம் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்..