தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது இந்த முகாமில் பல்வேறு பெண்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார்
இந்த நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமா பிரபா மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா பொது மேலாளர் கணேசன் மாவட்ட தொழில் மையம் பயிற்சி ஆசிரியர் பாலசங்கர் ஊரக வேலை பயிற்சி நிறுவன இயக்குனர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்